Breaking News

மாரிதாஸ்,கல்யாண ராமன்,கார்டூனிஸ்ட் வர்மா, கிஷோர் கே சுவாமி, சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்கானிப்பாளரை சந்தித்த கூட்டமைப்பினர்!!

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.கண்ணன் IPS அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சந்திப்பு:

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக முகநூல் பக்கம் , யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் , தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி , சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை திட்டமிட்டு பரப்பி வரும் VARMA CARTOONIST என்கிற S.சுரேந்திர குமார் என்பவர் மீதும் , மேலும் தொடர்ந்து முகநூல் பதிவுகள் மூலம் சமூகங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்யாண ராமன் மாரிதாஸ் , கிஷோர் K சுவாமி மற்றும் சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் , மேலும் VARMA CARTOONIST , KALYANA RAMAN , WRITER MARIDAS , சிவனடியார் மவுண்ட் கோபால் மற்றும் KISHORE K SWAMY ஆகிய முகநூல் பக்கங்கள் , யூட்யூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளைஃ முடக்க வேண்டி,
அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D கண்ணன் IPS அவர்களிடம்
புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S K ஜாஹிர் உசேன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் D முஹம்மது யூனூஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரவூப்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தொண்டரணி
செயலாளர் ஜமால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மருத்துவ அணி இப்ராகிம், தமுமுக மமக செம்பாக்கம் நகர தலைவர் நாசர் பாஷா மற்றும் சகோதர இயக்கங்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

 

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *