Breaking News

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை குறைத்திட வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16.07.2020 நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்புக்குழு தலைவர் A.K.M.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். நகர அமைப்புக் குழு நிர்வாகி K.M. நைனாஸ் அஹமது வரவேற்று பேசினார். மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன், துணை செயலாளர் M .A . ஜெகபர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் M. காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.மண்டல ஊடக பிரிவு செயலாளர் பொதக்குடி ஹபீப்,
SMI மாவட்ட செயலாளர் சபிருல் ஹஸன்,பொருளாளர் B.முகம்மது ரியாஸ், முன்னாள் நகர நிர்வாகிகள் M. H.நிஜாமுதீன், K.B.முகம்மது ஜான் , பொதக்குடி கிளை தலைவர் A.சாகுல் ஹமீது, ஆகியோர் விலை உயர்வையும் மத்திய அரசையும் கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை உணர்த்தும் விதமாக ஆட்டோ ஒன்றினை கயிறு கட்டி மமகவின் தொழிற்சங்கத்தினர் (MTS)இழுத்து வந்தனர்.முடிவில் MTS நிர்வாகி அக்பர் அலி நன்றி கூறினார்.

போராட்டத்தில் பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம் கிளை நிர்வாகிகள், வாகன ஓட்டிகள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *