Breaking News

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி அரசு பொதுத்துறை செயலரை சந்தித்து மமக வலியுறுத்தல்

சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப அந்தந்த நாடுகளில் பதிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேலாக, கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், வேலை இழந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அதேபோல் கிர்கிஸ்தான் நாட்டிக்கு மருத்துவ கல்வி பயில சென்ற மாணவர்களையும் உடனே மீட்டு நாட்டிற்க்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

அதனடிப்படையில் தலைமை செயலகத்தில் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார் ஐஏஎஸ் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் எம். யாகூப் மற்றும் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர் .

இச்சந்திப்பின்போது சார்ட்டர்டு பிளைட் எனப்படும் தனியார் விமான சேவை மூலம் வரும் தமிழர்களையும் அரசு செலவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஐ அமீன் அஹ்மது
அலுவலக செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

மக்கள் உரிமை (17-14) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமை தியாகத் திருநாள் சிறப்பிதழில்…. ஹஜ் 1441 – ஒரு மீள் பார்வை – முனைவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *