Breaking News

இந்து முஸ்லிம் மோதல்களை தூண்டும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வாணியம்பாடியில் தமுமுக புகார் மனு

கடந்த நான்கு நாட்களாக முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் இந்துத்துவ பிரமுகர்கள் தொடர்ந்து மதவெறி தூண்டி இந்து முஸ்லிம் சமூகத்திற்கிடையே கலவரம் தூண்டும் வகையில் அருவருக்கத்தக்க முறையில் பேசி வருகிறார்கள்.இந்த வீடியோக்களை அப்பாவி மக்கள் பார்க்கும்போது உண்மைக்கு புறம்பாக புரிந்துகொண்டு வன்முறையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நகர நிர்வாகிகள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

‘சிவனடியார் மவுண்ட் கோபால்’ மற்றும் ‘கல்யாணராமன்’ என்கிற இரண்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் பரப்பும் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் கலவரம் தூண்டும் பேச்சுக்களின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய ஆதாரங்களோடு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் காவல்துறையில் புகார அளிக்கப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் D.இக்பால் அஹ்மத் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் S.சலீம் சகியுல்லாஹ் கான் மற்றும் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் A K.கலீம் பாஷா S. S.தன்வீர் அஹ்மத், இனாயத்துல்லாஹ், மெட்ரோ அனீஸ்,N.ஷப்பீர் அஹ்மத், ஷேக் முஹம்மத் ஆகியோர் கொண்ட குழுவினர் காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரிடம் இதுகுறித்து விளக்கி எழுத்துபூர்வமாக புகாரளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *