Breaking News

மத கலவரத்தை தூண்டும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் : சென்னை பரங்கிமலையில் தமுமுக புகார் மனு

முகநூல் பக்கம், யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் , மேலும் KALYANA RAMAN , சிவனடியார் மவுண்ட் கோபால் ஆகிய முகநூல் பக்கங்கள் , யூட்யூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளைஃ முடக்க வேண்டியும் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் மனு தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK ஜாஹிர் உசேன் தலைமையில் சென்னை பரங்கிமலை சரகம் காவல் துணை ஆணையாளர் திரு. பிரபாகரன் அவர்களை தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

தமுமுக மாவட்ட செயலாளர் நைனார் முஹம்மது, மாவட்ட பொருளாளர் தாம்பரம் இப்ராஹிம், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால், செம்பாக நகர தலைவர் நாசர் பாஷா ஆகியோர் உடன் இருந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

Check Also

மனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்

மதுரை ஒத்தக்கடையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *