Breaking News

கார்டூனிஸ்ட் வர்மா படத்தை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒசூரில் கூட்டமைப்பினர் புகார் மனு

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக இஸ்லாமியர்கள் உயரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தரம் தாழ்ந்து கொச்சைப்படுத்தும் விதமாக கார்டூனிஸ்ட் வர்மா வரைந்த கார்டூனை SEKAR Jt என்ற பெயரில் இயங்கும் முகநூல் கணக்கு வாயிலாக HOSUR ஓசூர் முகநூல் குழுமத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தையும்,பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணமாக பதிவிட்டிருந்த சேகர் என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி ஓசூர் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒசூர் நௌசாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கலீல் பாஷா மற்றும் தோழமை இயக்க,கட்ச நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். காவல் துறையினர் சமூகவிரோதியை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

 

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *