Breaking News

கல்யாண ராமன்,மாரிதாஸ், கார்டூனிஸ்ட் வர்மா, கிஷோர் கே சுவாமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் தமுமுக புகார் மனு!!

சமூக வலைதளம் முகநூல் பக்கம் , யூடியூப்பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி)
அவர்களை பற்றியும் இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் , தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி , சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை திட்டமிட்டு பரப்பி வரும் சிவனடியார் மவுன்ட் கோபால் என்பவன்மீதும்
தொடர்ச்சியாக காவி எச்சங்களை வாந்தியேடுக்கும் VARMA CARTOONIST என்கிற S.சுரேந்திர குமார் என்பவர் மீதும் , மேலும் தொடர்ந்து முகநூல் பதிவுகள் மூலம் சமூகங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்யாண ராமன் மாரிதாஸ் ,கிஷோர் K சுவாமி ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிஆகிய முகநூல் பக்கங்கள் , யூட்யூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளைஃ முடக்க வேண்டி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தமுமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் தமுமுக மாவட்ட துணை செயலாளர் தாஜுதீன்,நகர தலைவர் இஸ்மாயில் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் ஒன்றிய ஊடகப்பிரிவு ஒன்றிய செயலாளர்கள் ரிஃபா கதலி, சையத் இம்ரான் பங்கேற்றார்கள்.

 

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *