Breaking News

கார்டூனிஸ்ட் வர்மா மீது குண்டர் சட்டம்! தமுமுக தலைமையில் புகார் மனு!!

தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உலகம் போற்றும் உத்தம முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவதூறான, தவறான செய்தியை பரப்பிய திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்கின்ற வர்மா என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் அனைத்து கட்சி சார்பில் விழுப்புரம் தமுமுக மமக மாவட்டத் தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி
தமுமுக-மமக மாவட்ட தலைவர் பசல் முகமது,விழுப்புரம்
தமுமுக-மமக மாவட்ட பொருளாளர்
KSM.அப்பாஸ், கள்ளக்குறிச்சி தமுமுக மமக மாவட்ட பொருளாளர் ஜஹாங்கீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் Ex.MLA வழக்கறிஞர் இரா. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் A.M.சரவணன், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்புக்குழு ஹாஜி.M.S. இஸ்மாயில், இந்தியன் முஸ்லிம் லீக் சாகுல் அமீது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் M.அப்துல் அக்கீம் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வி.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மேலும் விழுப்புரம் தமுமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், திமுக நகர நிர்வாகி SKS.முகமது அலி மற்றும் அனைத்து தோழமைக் கட்சிகள் ஜமாஅத் ஒருங்கிணைப்பு குழு தமுமுக மமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Check Also

ராயபுரத்தில் ஆர்வத்துடன் தமுமுக-வில் இணைந்து வரும் சகோதரர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் வண்ணை ஜாகீர், பகுதி செயலாளர்கள் சிராஜ், வசீம், பகுதி பொருளாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *