Breaking News

Daily Archives: July 15, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை நல்லடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுகவினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்ணம் பேட்டையை சேர்ந்த தோல் வியாபாரி ஜனாப் கலீல் அஹமது என்ற 65 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் நேற்று (14/07/20) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை பெற்ற வேலூர் தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை குடியாத்தம் நகர தமுமுகவினரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஜமாத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இறந்த நபரின் உடல்   …

Read More »

கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்த வடசென்னை தமுமுகவினர்

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த அர்தீஃப் முஹம்மது என்ற 19 வயது நிரம்பிய வாலிபர் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை ஆர்கே நகர் பகுதி தமுமுகவினர் உரிய முறையில் காசிமேடு கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்து சகோதரரை இந்து மத முறைப்படி அடக்கம்! பேர்ணாம்பட்டு தமுமுக-வின் மனிதநேய பணி!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் மற்றும் குடும்பத்தினர் தமுமுக நிர்வாகிகளை தொடர்புக் கொண்டு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து களத்தில் இறங்கிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களின் உடலைப் பெற்றுக்கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அவர்களின் மத முறைப்படி கண்ணியமான …

Read More »

கார்டூனிஸ்ட் வர்மா மீது குண்டர் சட்டம்! தமுமுக தலைமையில் புகார் மனு!!

தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உலகம் போற்றும் உத்தம முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவதூறான, தவறான செய்தியை பரப்பிய திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்கின்ற வர்மா என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் அனைத்து கட்சி சார்பில் விழுப்புரம் தமுமுக மமக மாவட்டத் தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி தமுமுக-மமக மாவட்ட தலைவர் …

Read More »

வடபொன்பரப்பியில் பொதுமக்களுக்கு தமுமுக சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி தமுமுக மமக கிளையின் சார்பாக ஊர் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

குலசேகரன்பட்டினத்தில் கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பரவலாக கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவலர் குடியிருப்பு மற்றும் வடக்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி குலசை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 11வது கட்டமாக வழங்கப்பட்டது. கொரானா வைரஸ்க்கு எதிர்வினை ஆற்றும், மத்திய, மாநில அரசுகளால் பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த சித்த மருந்தான கபசுரகஷாயம் வழங்கும் நிகழ்ச்சியை குலசை கிளை மமக …

Read More »

தப்லிக் சகோதரர்களுக்கு பெரியஅளவில் உதவிய தமுமுக! கோவையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தப்லிக் சகோதரர்கள்!

டெல்லி மாநாட்டில் கலந்துக் கொண்டு திரும்பிய பின்னர் அவர்கள் தப்லிக் சகோதரர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அன்று முதல் தமுமுக சார்பில் நடைபெற்ற சட்ட போராட்டம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்துக்கொடுத்து, அவர்களின் இல்லங்களில் தமுமுக ஆம்புலன்ஸில் சென்று சேர்த்த உதவிக்காகவும், மருத்துவ உதவிக்காகவும் நன்றியை தெரிவிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட, மாநில, அணி …

Read More »

தேங்காய்பட்டணத்தில் தமுமுக சார்பில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தேங்காய்பட்டணம் வாழவிளாகம் மற்றும் பஸ் நிலையம் , மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது…

Read More »

ஆதிப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் புதிய கிளை துவக்கம் மற்றும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஆதிப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் புதிய கிளை துவங்கபட்டது மற்றும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு தலைமை மாவட்ட தலைவர் A அபுசாலிகு தலைமை தாங்கினார் . முன்னிலை மமக மாவட்ட செயலாளர் கிரீன்முகமது மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான் தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் A J அப்பாஸ் ஒன்றிய செயலாளர் கலந்தர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் கழக கொடியேற்றி இயக்கத்தின் …

Read More »

ஷார்ஜாவிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களிற்கு மதுரை விமானநிலையத்தில் மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்களின் சேவை

ஷார்ஜாவிலிருந்து மதுரை விமான நிலையத்தில் 179 நபர்கள் தாயகம் திரும்பினர்.தாயகம் திரும்பியவர்கள் அனைவருக்கும் டீ ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள்,வயது முதிர்ந்தவர்களிற்கு அதிகாரிகளுடன் பேசி ஈ-பாஸ் ஏற்பாடு, பயணிகளிற்கு தேவையான உதவிகளை புரிந்தனர்

Read More »