Breaking News

புதுச்சேரியில் கொரோனோவினால் இறந்தவரின் உடலை பெற்று சொந்த ஊருக்கு அனுப்பிய தமுமுகவினர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், லட்சுமிநாராயணபுரம் கிராமம், வ.உ.சி நகரைச் சேர்ந்த சகோதரருக்கு
கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேற்படி நபர்
(11.07.2020) நேற்று மாலை இறந்துவிட்டார்..

இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட RDO அவர்கள் கடலூர் வடக்கு மாவட்ட
தமுமுக &மமக தலைவர் V.M.சேக் தாவூத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே V.M.சேக் தாவூத் புதுச்சேரி மாவட்ட தமுமுக மமக தலைவர் NMS. சகாபுதீனை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக உதவுமாறு கேட்டுக்கொண்டார்..

அதனடிப்படையில் புதுச்சேரி மாவட்ட தமுமுக செயலாளர் M.நூர் முகமது தலைமையில் மமக மாவட்ட துணைச் செயலாளர் I.பிரகாஷ் (எ)விஜய்,தொண்டரணி மாவட்ட செயலாளர் N.முகமது சேட், இளைஞரணி மாவட்ட செயலாளர் A.முகமது இம்ரான், சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் த.கலிமுல்லா, வில்லியனூர் நகர இளைஞரணி துணைச் செயலாளர் நஜிமுதீன், உள்ளிட்ட தமுமுக குழுவினர் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு இன்று (12/07/2020) மாலை சென்று கொரோனாவால் இறந்தவரின் உடலை பிணவறையில் இருந்து பெற்று கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சொந்தமான அவசர ஊர்தியில் ஏற்றி அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர்

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *