Breaking News

சிபிஎஸ்இ பாடதிட்ட குறைப்பு- திட்டமிட்டு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை கோட்பாடுகளை மறைக்க துடிக்கும் மத்திய அரசு.?

சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வெளியிடும் அறிக்கை

கொரோனா பெருந்தொற்றால் கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் நடப்பு கல்வியாண்டை முறைபடுத்திவதில் பெரும் சிக்கல் உள்ளதால் மாணவா்களின் சுமையை குறைக்க பாடதிட்ட குறைப்பு என்ற அருமையான திட்டத்தை செயல்படுத்த இருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் திட்டத்தை சமூகநீதி மாணவா் இயக்கம் வரவேற்கிறது.

எனினும் இந்த 30% பாடதிட்ட குறைப்பில் நீக்க உகந்த பாடங்களை நீக்காமல், இந்திய குடிமகன் அடிப்படையாக கற்று தொிந்து கொள்ள வேண்டிய மதச்சார்பின்மை, தேசியம், குடியுரிமை, கூட்டாட்சித்துவம், உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுசூழல் மற்றும் இயற்கை அறிதல் உள்ளிட்ட முக்கிய பாடபிாிவுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது வண்மையாக கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக 9 முதல் 12 ம் வகுப்பு பாடதிட்ட குறைப்பில் அறிவியல் மற்றும் அரசியல் அறிவு பாடமான சமூக அறிவியல் பாடத்தில் மாணவா்கள் கற்க வேண்டிய மிக முக்கிய பாடமான ஜனநாயகம், தேசியம், பரிணாம வளர்ச்சி, இனப்பெருக்கம், சூழியல், அண்டை நாடுகளுடனான தொடா்பு, சாதி, மத, பாலினம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பன்முகதன்மை, இந்திய அரசியல் அமைப்பின் ஜனநாயக உாிமைகள், இந்நிய உணவு பாதுகாப்பு பாடங்கள் உள்ளிட்ட கல்வி அடிப்படை கோட்பாடுகளை நீக்கயது அறிவை பொருக்க வேண்டிய கல்வியை வழங்காமல் மாணவா்களை மழங்கடிக்கும் வேலையோ என்ற ஐயம் எழுகிறது.

நாடு முழுவதும் உள்ள கல்வியாளா்கள், போராசிாியா்கள் இந்த பாடதிட்ட குறைப்பிற்கு அதிக விமா்சனங்களையும் எதிா்ப்புகளையும் காட்டி வருகின்றனா். அதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்திலும் வெறுப்பை விதைக்காமல் நீக்க உகந்த பாடத்தை நீக்கீ மறு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

எனவே அனைத்து துறைகளிலும் செய்யும் தங்கள் அரசியல் சித்து விளையாட்டை கல்வியிலும் புகுத்தாமல் சாியான பாடத்தை மாணவா்களுக்கு அளிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ முன்வர வேண்டுமாய் சமூகநீதி மாணவா் இயக்கம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞா் நூா்தீன்,
மாநில செயலாளா்,
சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI)

Check Also

பர்ஹான் ஜுபேரி மற்றும் ரவிஷ் அலிகானை உடனடியாக விடுதலை செய்!

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *