தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவையால் கவரப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏனங்குடி முஜீப் தலைமையில் 40க்கும் மேலான இளைஞர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ், தமுமுக மாவட்ட செயலாளர்
மு.நிஜாமுதீன், மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரபிக்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் எஸ். முகம்மது இஸ்மாயில்,மாவட்ட துணை தலைவர் எச்.முஸ்தபா, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.முகம்மது சிராஜ் , தமிமுல் அன்சாரி, மமக மாவட்ட துணை செயலாளர் ராயல் ரபீக்,வவ்வாலடி,கோட்டூர்,வடகரை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மமக திருவாரூர் மாவட்ட தலைவர் முஜிப் ரஹ்மான், மமக விவசாய அணி மாநில துணை செயலாளர் ஓ.எஸ்.இப்ராஹிம், திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காட்டூர் பைசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.