Breaking News

காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் பணி- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அதிகாரிகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதன்மையாளர் (டீன்) மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் நிலைய இயக்குநர் மருத்துவர்.திருநாவுக்கரசர் ஆகியோரை தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.ஜெ.ஹாஜாகனி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று 08.08.2020 சந்தித்தார்.கோரொனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்கமளிக்கும் விதமாக தமுமுக பொதுச்செயலாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

தமுமுக சிறப்பான சேவைகளையும்,பணிகளையும் செய்து வருகிறது காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் சேவை என உணர்ச்சிமிகுடன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாநில மருத்துவரணி பொருளாளர் கலீலுர் ரஹ்மான்,மத்திய சென்னை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆசாத்,பகுதி மருத்துவரணி செயலாளர் ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும்-ஜவாஹிருல்லா உரை

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *