Breaking News

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! !

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்!

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! !

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி என்ற பகுதிக்கு எரிபொருள் எடுத்து செல்ல தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை (Irugur-Devangonthi Pipeline Project – IDPL) செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

தேவனகொந்தி பகுதிக்கு தேவையான பெட்ரோலை இருகூரிலிருந்து கொண்டு செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மொத்தம் 294 கிலோ மீட்டர் தொலைவுக்கு எண்ணெய் குழாய் பாதை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் இந்த நாசகர திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் இந்த குழாய் பதிக்கும் திட்டத்தை நடைமுறை படுத்த முயற்சிப்பது அப்பகுதி விவசாயத்தை முடக்கும் செயலாகும்.

நாட்டிற்கு வளர்ச்சி திட்டகள் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழிப்பதாக இருக்க கூடாது.

கடந்த 2012-13 ஆண்டில் செயல்படுத்தவிருந்த கெயில் நிறுவன குழாய் பதிப்பு திட்டமும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி உட்பட எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தடை விதிக்கப்பட்டது.

எனவே விவசாயத்தை பெரிதும் பாதிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *