Breaking News

Daily Archives: July 8, 2020

தமுமுக சேவையால் கவரப்பட்ட இளைஞர்கள்! நாகை ஏனங்குடியில் எழுச்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவையால் கவரப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏனங்குடி முஜீப் தலைமையில் 40க்கும் மேலான இளைஞர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ், தமுமுக மாவட்ட செயலாளர் மு.நிஜாமுதீன், மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரபிக்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் எஸ். முகம்மது இஸ்மாயில்,மாவட்ட துணை தலைவர் எச்.முஸ்தபா, தமுமுக …

Read More »

தமுமுக தன்னார்வலர்களிற்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய புதுக்கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்

சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமுமுகவின் மருத்துவ சேவை அணி செயல்வீரர்கள் அனைவருக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி N95 முகக்கவசம் , 3 அடுக்கு முகக்கவசம் , கையுறைகள் , தொப்பி , மற்றும் கிருமி நாசினிகள் ஆகியவற்றை புதுக்கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மூத்த பேராசிரியர் முனைவர் கபூர் அவர்கள் மனமுவந்து வழங்கி ஊக்கப்படுத்தினார். இவை விரைவில் கழகத்தின் மருத்துவ சேவை செயல்வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன

Read More »

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக காரைக்கால் மாவட்ட தமுமுக-மமக நிர்வாகத்திற்கு அனுமதி சான்று வழங்கிய நகராட்சி ஆணையாளர்.

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்தவற்காக தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் அப்துர் ரஹீம்,மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத், மாவட்ட மருத்துவரணி செயலாளர் பயாஸ் ஆகியோர் கொண்ட குழுவிற்கு காரைக்கால் நகராட்சி ஆணையாளர் உடல்களை அடக்க செய்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.

Read More »

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த காரைக்கால் மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரை நல்லடக்கம் செய்த பரமக்குடி தமுமுக-மமக மனிதநேய பண்பாளர்கள்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி அவர்களின் மூத்த சகோதரர் சேகர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது உடலை பெற்ற இராமநாதபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் மரணமடைந்த சகோதரை நல்லடக்கம் செய்த பல்லாவரம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் நகரத்தை சேர்ந்த 51 வயது சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்த அரக்கோணம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சகோதரர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கோண நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று ஈத்கா பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் மரணமடைந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த மதுரை வடக்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரை K-புதூர் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். உறவினரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை வடக்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள்,வில்லாபுரம்,பெரியார் கிளை நிர்வாகிகள் உடலை பெற்று K-புதூர் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் உடலை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்

மதுரை தெற்குவாசல் பகுதி சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். தெற்குவாசல் ஜமாத்தினர் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்டம் வில்லாபுரம் 61-வது வார்டு,வைக்கம் பெரியார் கிளை தமுமுக நிர்வாகிகள் உடலை பெற்று மினாநூர்தீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! !

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! ! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி என்ற பகுதிக்கு எரிபொருள் எடுத்து செல்ல தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை (Irugur-Devangonthi Pipeline Project – IDPL) செயல்படுத்த மத்திய பாஜக …

Read More »