முன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கும்பகோணத்தின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவநிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தியின் மனைவியுமான மருத்துவர் விஷ்ணுபிரியா கொரோனா தொற்றால் தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மமக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை அரசாங்க வழிகாட்டலின்படி பேக்கிங் செய்து தமுமுக அவசர ஊர்தி வாயிலாக கும்பகோணத்திற்கு உடலை எடுத்து சென்று அவர்களது மத நம்பிக்கையின்படி கும்பகோணம் பெருமாண்டி மயானத்தில் தகனம் செய்தனர்.
ஏராளமான குழுந்தைகள் பூமிக்கு வருகை தந்தபொழுது பிரசவம் பார்த்து உதவிய முன்னணி மகப்பேறு மருத்துவரான விஷ்னுப்பிரியா அவர்களை
பூமியிலிருந்து விடை பெறும் பொழுது தமுமுக தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 162 உடல்களையும், கொரோனா இல்லாத மரணமடைந்தவர்களின் 58 உடல்கள் என மொத்தம் 220 உடல்களை தமுமுக மமக தொண்டர்கள் அடக்கம் செய்துள்ளனர்.