Breaking News

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் A.ஹாஜா நஜ்புதீன் தலைமையில் நடைப்பெற்றது.தமுமுக நகர செயலாளர் A.பாஷா, 8-வது வார்டு மமக செயலாளர் A.இப்ராஹிம் பஹத் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M.முஜிபு ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் A.குத்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் H.நவாஸ், மமக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் H.M.D.ரஹ்மத்துல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறுதியாக மமக நகர செயலாளர் M.ஹாஜா நஜ்புதீன் நன்றியுரை கூறினார்.

தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என திரளான மக்கள் கலந்துக் கொண்டு கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

Check Also

சங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலமான பாலன் இல்லம், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னுவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *