Breaking News

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மமக வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் தலைசிறந்த ஊடகவியலாளர்களுக்கு பா.ஜ.க சார்புடைய பாசிச சக்திகளும் தனிநபர்களும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதும் அது கொலை மிரட்டல் அளவுக்கு வளர்வதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.
பா.ஜ.க சார்புடைய மாரிதாஸ் என்ற நபர், குணசேகரன், கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், செந்தில்வேல் ஆகியோரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

சமூக ஊடகங்களிலும் மேற்கண்ட ஊடகவியலாளர்களை மிரட்டும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர்களின் பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றை குறி வைத்து இந்த சக்திகள் இயங்கி வருவது எந்த வகையிலும் ஏற்க முடியாது.

மேற்கண்ட ஊடகவியலாளர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு இத்தகைய சக்திகளே முழுப்பொறுப்பு.

எனவே, தமிழக அரசு விழித்து கொண்டு இந்த கருத்தியல் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *