Breaking News

Daily Archives: July 5, 2020

கொளத்தூர் பகுதியில் காவல் துறையினர் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் தேநீர் வழங்கிய தமுமுக

வடசென்னை மாவட்டம் முழு ஊரங்கில் மக்கள் பணியாற்றும் காவல் துறையினர் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் கொளத்தூர் பகுதி சார்பாக டீ பிஸ்கட் தண்ணீர் வழங்கப்பட்டது.

Read More »

ஆரணி நகரில் பொதுமக்கள் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

ஆரணி நகரில் பொதுமக்கள் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் பங்கு கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தார்கள்..

Read More »

தேவராயம் பாளையம் கிளையில் தமுமுக சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

திருப்பூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேவராயம் பாளையம் கிளை சார்பாக நாளுக்கு நாள் கொரோனா தெற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Read More »

காஞ்சிபுரம் மாவத்தில் நோய் தொற்றால் இறந்த நான்கு உடலை அடக்கம் செய்த தமுமுக

காஞ்சிபுரத்தின் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 4 பேரின் உடல்களை காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் அரக்கோணத்தை சேர்ந்த ஒருவர் குன்றத்தூர் சேர்ந்த ஒருவர் ஆக நான்கு பேருடைய உடலை காஞ்சிபுரம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது அந்தந்த பிரேதத்தை உடைய உறவினர்கள் எங்களுடைய உறவினர்களே பங்கேற்காத போது நமது சமூகத்தையும் நமது அமைப்பையும் நமது செயல்பாடுகளையும் குறித்து நெகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்கள்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை பாமா நகர் சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் இன்று ஞாயிற்றுக்கிழமை 05-07-2020 காலை மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கினங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், வில்லாபுரம் 61-வது வார்டு,வைக்கம் பெரியார் கிளை நிர்வாகிகள் உடலை பெற்று சிவகாசி பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கண்டாச்சிபுரம் பகுதியில் தமிழ்நாடு துணிக்கடை கட்டிடம் தீ விபத்தின் களத்தில் தமுமுக

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் தமிழ்நாடு துணிக்கடை கட்டிடம் தீ விபத்து நடந்ததை அடுத்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைப்பதற்கு கள்ளக்குறிச்சி கிளை தமுமுக சார்பாக உதவி செய்யப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை விழுப்புரம் மாவட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் M.Y. முஸ்தாக்தீன் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மத், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் ஜஹாங்கீர், விழுப்புரம் …

Read More »

பூவிருந்தவல்லியில் கொரோனா தொற்றால் இறந்த சகோதரி உடலை அடக்கம் செய்த தமுமுக

திருவள்ளுவர் மேற்கு பூவிருந்தவல்லி கண்டொன்மென்ட் பகுதியை சேர்ந்த ஒரு சகோதரி Kmc மருத்துவமனையில் மரணிவிட்டார் மருத்துவர்கள் பரிசோதித்து கொரோனா பாசிடிவ் என அறிவித்ததின் பேரில் அவரது உடலை மாவட்ட தலைவர் சேக் தாவுத் தலைமையில் தமுமுக தன்னார்வலர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் Ipp மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா, பூவை.நகர தலைவர் காஜா மைதீன், நகர துணை செயலாளர் ஆட்டோ ஜலால் நகர சுற்றுசூழல் அணி மொய்னுதீன்,10 வார்டு துணைச்செயலாளர் ரியாஸ், …

Read More »

தஞ்சை மாநகர தமுமுகவின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் MD., DA., அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தன்னலமற்ற செயல்பாடுகளை பாராட்டிய பொழுதும், மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களுடைய பணிகள் கொரோனோ வைரஸ் ஒழிப்பில் அவர்கள் காட்டிய அக்கரை மற்றும் பணிகளை பாராட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாநில செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Read More »

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மமக வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தலைசிறந்த ஊடகவியலாளர்களுக்கு பா.ஜ.க சார்புடைய பாசிச சக்திகளும் தனிநபர்களும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதும் அது கொலை மிரட்டல் அளவுக்கு வளர்வதும் மிகுந்த கண்டனத்திற்குரியது. பா.ஜ.க சார்புடைய மாரிதாஸ் என்ற நபர், குணசேகரன், கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், செந்தில்வேல் …

Read More »

நள்ளிரவிலும் அயராது தொடரும் ஜனாஸா நல்லடக்கங்கள் மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் மகத்தான சமூகப் பணிகள்

வில்லாபுரத்தை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 04-07-2020 இரவு மரணமடைந்தார். உறவிணர்களின் வேன்டுகோளுக்கினங்க நள்ளிரவு 1 மணிக்கு உடலை பெற்ற மதுரை தெற்கு மாவட்டம் வில்லாபுரம் 61-வது வார்டு மற்றும் மஹபூபாளையம் கிளை தமுமுக-மமக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்.

Read More »