Breaking News

ம ம க தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் இப்ராஹீம் நம்மை விட்டுப் பிரிந்தார்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி.

என் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹசன் இப்ராஹீம் அவர்கள் நேற்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது.

சென்னை தி.நகரில் உள்ள பிரபல சன்கோல்டு கவரிங் நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் ஹஸன் அவர்கள். சமுதாய சேவையில் மிகுந்த ஈடுபாட்டுடைய சகோதரர் ஹசன் அவர்கள் தமுமுக மற்றும் மமக பணியில் மிகவும் ஆர்வமுடன் பங்கு கொள்வார்.

சமீபத்தில் நடைபெற்ற சிஏஏ போராட்டங்களிலும், கொரோனா நிவாரண பணிகளிலும் அர்ப்பணிப்புடன் தனது பங்களிப்பை அளித்தவர் சகோதரர் ஹசன் இப்ராஹீம் அவர்கள்.

அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தமுமுக குடும்பத்தினருக்கும் பேரிழப்பு.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பிழைகளைப் பொறுத்து உயர்ந்த சுவனத்தை அளிக்கப் பிரார்த்தனை செய்வோம்.

எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
ம ம க

Check Also

கொரோனா கொடும் அரக்கன்- எச்சரிக்கை தேவை- பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா,தலைவர்,தமுமுக-மமக

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *