புதுச்சேரி மாவட்டம், வில்லியனூர் தொகுதி, சுல்தான்பேட்டை வாய்க்கால் தெரு கார்னரில் பாஸித் புரவிஷனல் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வரும் ஜனாப் அஷ்ரப் பாய் அவர்களின் கடையானது கடந்த வாரம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்து விட்டது..
இந்த நிலையில் அவர் பொருளாதாரத்தில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் கடையை புனரமைத்து நடத்துவதற்காக புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் (ரூபாய்.16,000) நிதி உதவி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் M.நூர் முகமது.மமக மாவட்ட துணைச் செயலாளர் I.பிரகாஷ்.இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில்
வில்லியனூர் நகர தமுமுக மமக தலைவர் A. அப்துல் காதர்.மமக நகர செயலாளர் R.தமிமுன் அன்சாரி நகர தமுமுக துணைச் செயலாளர் J.முபாரக் அலி.ஆகியோர் கலந்து கொண்டனர்