Breaking News

2000 நபர்களுக்கு கபசுர குடிநீர்! கூத்தாநல்லூரில் தொடரும் தமுமுக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக குடிநீர் வழங்கும் முகாம்
8 மற்றும் 9 வது வார்டு பகுதிகளில் 28.06.2020) காலை 9.30 மணிக்கு துவங்கியது.

இந்நிகழ்வில் மமக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவர் காரியமங்கலம் ரபீக், ஜமாத் செயலாளர் ஜமால் ஷேக், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் தெய்வநாயகி காவல்துறை உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர் A.அப்துல் ரசீது ஆகியோர் கலந்துக்கொண்டு கொரோனா விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினர்.

மமக மாவட்ட துணை செயலாளர் M.A.ஜெகபர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் காதர் பாட்சா,நகர அமைப்புக் குழு நிர்வாகிகள் A.K.M. ஜெகபர் சாதிக், S.M.A. பரக்கத் அலி, K.M. நைனாஸ் அஹமது, முன்னாள் நகர நிர்வாகிகள் M.H. நிஜாமுதீன், K.B. முஹம்மது ஜான், P.A.நைனா முகம்மது,T.M. பதுருதீன்,மைதீன் ஷா, வார்டு செயலாளர் மரக்கடை சாதிக், N. பாஜில், சமூக ஆர்வலர் பசீர் அஹமது, திவான் அலி, முஸ்லீம் லீக் நிர்வாகி முகம்மது பாருக், காளியம்மன் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் முருகேஷ்,பர்வீன் கேப்ஸ் பாரக் அலி, மெஜஸ்டிக் மரவாடி
ஷாகின்ஷா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.தமுமுக மமக தொண்டர்கள் 8 மற்றும் 9 வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கினர். இதன் மூலம் சுமார் 2000 பேர்
குடிநீர் பருகி பயன் பெற்றனர்.

Check Also

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த காரைக்கால் மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *