Breaking News

கம்பம் நகரத்தில் 500 நபர்களுக்கு முககவசம் மற்றும்500 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் கம்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 500 நபர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது .மேலும் 500 நபர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி,தமுமுக மாவட்ட துணை செயலாளர் சலீம் பாஷா, கம்பம் நகர தலைவர் தமீமுன் அன்சாரி,மமக செயலாளர் இப்றாஹிம், பொருளாளர் ஜெய்லானி,நகர துணை தலைவர் ராஜா முகம்மது, துணை செயலாளர் ஷாஜகான், தில்பக்கர்,காலணி கிளை தலைவர் சிக்கந்தர் ராஜா,மனிதநேய தொழிற்சங்க தலைவர் அப்பாஸ் மந்திரிமற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபட்டது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொள்ள வேண்டும், கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என தமுமுக சார்பில் மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *