Breaking News

கோவை பொன்விழா நகரில் 2500 நபர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர்

கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட பொன்விழா நகர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு பொன்விழா நகர் கிளை தலைவர் சுபேர் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா விழிப்புணர்வை தமுமுக மாநில செயலாளர் A.சாதிக் அலி அவர்கள் நோட்டீஸ் விநியோகித்து நிகழ்வை துவக்கி வைத்தார். கொரோனா விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரத்தை கோவை வடக்கு மாவட்ட மாவட்ட தலைவர் E.அகமது கபீர் அவர்களும், கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குவதை கோவை வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளர்
K.U.முஜிபுர் ரஹ்மான் அவர்களும் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாநில துணை செயலாளர் கோவை அம்ஜத் அலிகான், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல், ஆசிக் அஹமது, மமக துணை செயலாளர் ரஜாக், மத்திய பகுதி தலைவர் A.இப்ராஹிம், கோவை வடக்கு மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் ஏ.எம்.சிராஜ்தீன், SMI மாவட்ட செயலாளர் முஹம்மது ஆசிக், SMI மாவட்ட துணை செயலாளர் பாஷா, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் ஆஷிக், இளைஞரணி மாவட்ட செயலாளர் மைதீன் ஆகியோா் முன்னிலையில், மத்திய பகுதி தமுமுக செயலாளர் ரியாஸ், பகுதி பொருளாளர் பைசல் ரஹ்மான், MTS முன்னாள் மாவட்ட செயலாளர் பசிர், பகுதி துணை செயலாளர் இக்பால், பொன்விழா நகர் கிளை நிர்வாகிகள் அலாவுதீன், சேட், சாதிக், ரபீக், உமா் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்துக் கொண்டனர்.இறுதியாக கிளை தமுமுக செயலாளர் புலவர் பாபு அவர்கள் நன்றியுரையாற்றினாா்கள்

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *