Breaking News

வெளிநாடுகளிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு உதவிய தமுமுக

27.6.2020 மதுரை விமான நிலையத்திற்கு மூன்று விமானங்கள் வந்தது இதில் முதல் விமானம் துபாயிலிருந்து மதுரைக்கு 189 பயணிகளும் இரண்டாவது விமானம் மாலத்தீவில் இருந்து மதுரைக்கு 192 பயணிகளும் லெபனான் நாட்டில் இருந்து டெல்லி வழியாக 75 பயணிகளும் வந்தடைந்தார்கள் வந்தவர்கள் அனைவருக்கும் மற்றும் பணியில் இருந்த காவல்துறை அரசுத்துறை அனைவருக்கும் ஏறத்தாள 600 உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது நமக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட பயணிகளுக்கு மிக எளிமையான முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக்கூறி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு சகோதரிக்கு இ பாஸ் இல்லாமல் வருகை புரிந்ததால் அவருக்கு அனுமதி வழங்கவில்லை அரசு அதிகாரிகள் எடுத்துக் கூறி நமது வாகனத்தில் மதுரையிலுள்ள அவர்கள் அவருடைய உறவினர் வீட்டில் நமது வாகனத்தில் இறக்கி விடப் பட்டது இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது கவுஸ் அவர்களும் மாநில வணிகர்அணி செயலாளர் எம் காதர் மைதீன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் களத்தில் தெற்கு மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது தலைமையில் மருத்துவ அணி செயலாளர் சதாம் உசேன் விளையாடு அணி செயலாளர் அஷக் ஹூசைன் மற்றும் பெரியார்நகர்கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் ராஜா முகம்மது ஹனிபா அலாவுதீன் மற்றும் பாதுஷ்ஷா சிறப்பான முறையில் பணியாற்றினார்கள்

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *