Breaking News

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழக அரசு: மமக தலைவர் ஜவாஹிருல்லா தி இந்து நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி

 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழகஅரசு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு (27.06.2020) அளித்த சிறப்புபேட்டி 

இந்திய அரசமைப்பு சட்டத்தையோ, விசா விதிமீறல் குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையோ மதிக்காமல், 129 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களை தமிழக அரசு தொடர்ந்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்துவதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகளான தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை, சென்னை உயர்நீதிமன்ற பிணையில் விடுவிக்கும்படி ஆணையிட்டிருந்தும், காற்றோட்டமோ; சுகாதாரமோ; தனி சமையலறையோ இல்லாத சிறையில், சுகாதாரமற்ற முறையில் அடைத்து, கொடுமைப்படுத்துவதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி உள்ளார்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால், 98 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், புழல் சிறை வளாகத்திலுள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சைதாப்பேட்டையிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அது வெளிநாட்டவர்கள் அடைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்ட சிறை அல்ல. இப்பொழுது, பிணை அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புழல் சிறார் சிறைக்கு சிறப்பு முகாம் என்று பெயர் மாற்றம் செய்து அனுப்பியுள்ளனர் என்று தி ஹிந்து பத்திரிக்கை பேட்டியில் கூறிய  திரு. ஜவாஹிருல்லா, 30 அல்லது 40 நபர்கள் மட்டுமே தங்கும் வசதி உள்ள இடத்தில், 8 பெண்கள் உள்ளிட்ட 98 நபர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் மே 19, 2020 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி தமிழக அரசு கருணையோடு இவர்களை கையாள வேண்டும். வங்கதேச குடியேறிகள் குறித்த வழக்கில், ” வெளிநாட்டவருக்கான தனிமை முகாம்களை அமைக்கும் அதிகாரத்தை, மத்திய அரசு,  மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைப் படி, தற்காலிக முகாம்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறார் சிறைகளை விட அதிக சுகாதாரமுள்ள இடங்களில் இவார்களை தங்க வைக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் அரசு கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் ” என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை ஜவாஹிருல்லா மேற்கோள் காட்டினார்.

சிறையில்வைக்ககூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படுகிறது.

ஜூன் 12 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மாண்புமிகு நீதியரசர் வி.ஆர். சுவாமிநாதன், அவர்களது சொந்த ஜாமினில் பிணை வழங்கிய போது, ” இவர்களை சிறப்பு முகாம்களுக்கு மாற்றாமல், சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள ஜாமியா காஸிமியா அரபிக் கல்லூரியில் தங்க வைக்க ஆவண செய்யுமாறு உள்துறை செயலருக்கு பரிந்துரைத்திருந்தார். அதாவது அது ஒரு சிறையாக இருக்கக்கூடாது ” என்று குறிப்பிட்டிருந்ததையும் ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டினார்.

மேலும், ” அவர்கள் விசா விதிமுறைகளை மீறியது உண்மை தான் என்றாலும், அதற்காக அவர்கள் அனுபவித்த தண்டனை போதுமானது ” என்று தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

நீதியரசர் சுவாமிநாதன், ” வாதிகள் தங்களின் அத்துமீறல்களுக்கான விலையை செலுத்தி விட்டனர். இந்நிலையில், வழக்கு முடியும் வரை இவர்கள் சிறையில் வாட வேண்டும் என நிர்பந்திப்பது ஒப்பீட்டு அளவிலும், நியாயத்தின் படியும் முறையானதாக இருக்காது. ” என்று கூறியுள்ளதையும் ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டினார்.

இது விஷயமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் பேச தான் முயற்சித்ததாகவும்; ஆனால், தமிழக அரசு, மத்திய அரசை குளிர்விக்க இப்படி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய ஜவாஹிருல்லா, பிரான்ஸ்,; பெல்ஜியம்; இந்தோநேசியா மற்றும் மலேசியாதாய்லாந்து, வங்காளதேசம். எத்தியோப்பியா விலிருந்து வந்துள்ள இவர்களிடம் அரசுகள் நடந்து கொள்ளும் முறையால், ராஜதந்திர உறவுகள் சீர்கெட வாய்ப்புள்ளதால், அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் கூடுதல் அழுத்தம் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Link

Check Also

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *