Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த ராஜ் டிவி ஓளிப்பதிவாளர்வேல்முருகன் மனைவி சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன்
கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

கொரோனா தொற்று செய்திகளையும், விழிப்புணர்வையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைத்துத் பணியாளர்களுக்கும், உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகனை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றிவரும் அவரது மனைவி சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் …

One comment

  1. கொராணா நோயால் இறந்தவர்களின் உடல்களை தங்கள் அமைப்பு அடக்கம் செய்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது இதில் மத வேறுபாடு இன்றி தங்கள் செயல்பட்டது மிகவும் மனிதநேயம் எடுத்துக்காட்டாக இருந்தது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *