Breaking News

பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற தமுமுக-வின் முதல் கூட்டம்

ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 14,2020 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உதயமானது .பத்து தினங்கள் கழித்து ஜூன் 24,2020 அன்று முதல் நிகழ்ச்சியாக ஆலோசனை கூட்டம் பாரிஸ் சர்ஸ்ல்ஸ்(sarsells) பகுதியில் உள்ள சகோதரர் நியாஸ் அகமது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது தலைமை வகித்தார். தமுமுக ரியாத் மண்டல தலைவர் சகோதரர் மீமிசல் நூர் முஹம்மது ,இஸ்லாத்தின் போராட்ட வரலாறு,பொது சேவையில் கிடைக்கும் இறையருள் குறித்தும்,பிரான்ஸில் தமுமுக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் காணொளி மூலம் உரையாற்றினார். தமுமுக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஒசூர் அல்தாப்,ரியாத்தில் இருந்து லால்பேட்டை சகோதரர் தௌஃபிக் அஹமத் ஆகியோர் பங்கு பெற்றனர்.

காணொளி காட்சி மூலம் கலந்துக்கொண்ட தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி தமுமுக உருவான வரலாறு ,அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகள், பொது நீரோட்டத்தில் தமுமுக பெற்ற நற்பெயர் குறித்து விரிவான உரையறை ஆற்றினார். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹமத் பேசுகையில் பிரான்ஸ் நாட்டில் தமுமுக உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், பிரான்ஸ் தமுமுக செயல்பட வேண்டிய தளங்கள் ,முறைகள் மற்றும் நமது குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் குறித்தும் உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

மண்டல பொருப்புக்குழு நிர்வாகிகளாக பைசல் ரஹ்மான், ஹுக்மத் அஷ்ரப், M.Y.அப்துல் கபூர், நியாஸ் அஹமத், முஹம்மத் அன்சாரி, முஹம்மது அமானுல்லா, ஹாஜா கவுஸ் மரைக்காயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பகுதி வாரியாக பிரான்ஸ் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் அதிக அளவிலான உறுப்பினர்களை சேர்த்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரான்ஸ் மண்டல பொதுக்குழு கூட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்வர்.

பொபினி ( bobigny), போண்டி (bondy) பகுதிக்கு – பைசல் ரஹ்மான்

மெளோன் (melon) மற்றும் வில்-லிசுர்மா (villiers-sur-marne) பகுதிகளுக்கு – ஹூக்குமத் மற்றும் முஹம்மத் அமானுல்லா

ஒல்னேசுபுவா (aulnay-sous-bois) பகுதிக்கு – அப்துல் கஃபூர்

லாகூர்நேவ்(la courneuve) பகுதிக்கு – முஹம்மத் அன்சாரி

சர்சல்(sarcelles) மற்றும் கார்ஜ் லே கொன்னேஸ்(garges les gonesse)
பகுதிக்கு – நியாஸ் அகமது ,இத்ரீஸ், ராஜா

கையாட் (gaillard) பகுதிக்கு – ஹாஜா ஹவுஸ் மரைக்கார் ,சையது பிலால் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *