Breaking News

சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி

சிறைச்சாலையில் உயிரிழந்த தந்தை,மகன் ஆகியோர் குடும்பத்தினரை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் நொலஸ்கோ, தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர்,தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.ஆசாத்,மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் T. ஆபீத், சாத்தை ஒன்றிய செயலாளர் தவ்பீக், உடன்குடி ஜபர்ருல்லாஹ், அப்துல் ரஹ்மான், அரசு மீரான், தவ்பிக் ஆகியோர் கவலையுடன், இரங்கலையும் ஆறுதல் கூறியதோடு, இவ்வழக்கில் மனிதநேயத்தோடு உதவிகள் செய்து வருகிற வியாபாரி சங்க நிர்வாகிகள், செல்வராஜ் மதுரம், பாபு சுல்த்தான் மற்றும் வழக்கிறிஞர் வேணுகோபால் ஆகியோரையும் சந்தித்து கள நிலவரங்களையும் கேட்டறிந்து நீதிக்கான போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் தன் பங்களிப்பை அளிக்கும் என்று கூறினர்.

காவல்துறையின் தாக்குதலால் மரணமடைந்த அப்பாவி தந்தை மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது குடும்பதாரிடம் இன்று மாலை வழங்கப்பட்டது. அவரது மகள் நீதிமன்றத்தை நம்பி உடல்களை பெற்று கொள்வதாக கண்ணீருடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால் சந்தித்து தமுமுக மமக சார்பாக இரங்கல் தெரிவித்து, இறைவன் உங்களுக்கு உதவி புரிவான் என்றும், நேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் கண்டன வெளியிட்டதையும், நாளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இணைய வழி போராட்டத்தையும் கூறியதுடன், உங்களுக்கு துணை நிற்போம் என ஆறுதல் கூறினார்.தமுமுக மாவட்ட துணை செயலாளர் யாசிர், பாளை பகுதி தலைவர் காதர் செயலாளர் அப்துல் நாசர்,துணை செயலாளர்
ஜமீன்,மருத்துவ அணி ஜெய்லானி
T. NAGER முபீன் உள்ளிட்டோர்  உடன் கலந்துக் கொண்டனர்.

Check Also

குலசேகரன்பட்டினத்தில் மனிதநேய தொழிலாளர் சங்கத்தில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர்கள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கத்தில் 19 ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *