Breaking News

130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக

130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கொரோனா எனும் கொடிய நோய் மக்களை வாட்டி வருகிறது. தமிழகத்தில் முதல் கட்ட ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறது. உறவினர்கள் கூட அருகில் நெருங்காத இந்த சூழ்நிலையில் மனிதநேயத்துடனும், அர்ப்பணிப்புடனும் இப்பணியைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது. உரியப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தொண்டர்கள் இச்சேவையை ஆற்றி வருகின்றார்கள்.

மார்ச் 22, 2020 இந்த பணியைத் தொடங்கி கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இறுதி சடங்கிற்கு தமுமுக மற்றும் மமக தொண்டர்கள் உதவி வருகின்றனர்.

பல தருணங்களில் காவல்துறையினர் நேரடியாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை அணுகி ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்ய உதவி கோரும் தருணங்களில் அந்த சேவையையும் அளித்து வருகிறோம்.தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஒரு உடல் மீனம்பாக்கத்திலும், சென்னை F2 காவல் நிலையம் கூறிய 12 உடல்கள் உட்பட ஏராளமான ஆதரவற்ற உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 48 உடல்களையும், விழுப்புரத்தில் 2, வேலூரில் 3, திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் 1, திருச்சி 1, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் 1, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 1 ஈரோடு 1 என 58 கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்களை இதுவரை இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அநாதையாக இறந்தவர்கள், சென்னை மண்டலத்தில் 62 பேரும், கோவையில் 2 பேரும், உடுமலைப்பேட்டையில் 2 பேரும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா ஒருவரும் என 68 சடலங்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 130க்கும் அதிகமான உடல்கள் அவரவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படிக்கு
எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

பேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *