Breaking News

மாலத்தீவிலிருந்து மதுரை வந்தடைந்த 170 பயணிகளுக்கு உணவு வழங்கி, உதவிகளை செய்தது தமுமுக

23.06.2020 காலை 10.30 மணியளவில் மாலத்தீவிலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 170 தமிழர்கள் வந்தடைந்தனர். இவர்கள் உணவின்றி பசியோடு இருப்பதாகவும்,இவர்களுக்கு உணவு வழங்குமாறும் அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை தொடர்புக் கொண்டு தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக தயாரித்து உணவு மற்றும் தண்ணீர் நேரடியாக பரிமாறப்பட்டது. மமக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காதர் மைதீன் தலைமையில் பெரியார் நகர் கிளையின் நிர்வாகிகள் ஹனீபா, ராஜா முகம்மது மற்றும் தமுமுக சகோதரர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *