Breaking News

புளியங்குடியில் தனியார் கல்லூரியில் தனிமை படுத்தப்பட்டுள்ள வெளியூர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சி

புளியங்குடியில்  வெளியூர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சி இதையடுத்து களத்திற்கு நேரடியாக சென்ற மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், தமுமுக முன்னால் நகர துணைச் செயலாளர் எஸ்.பி.மைதீன், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் மைதீன் ஆகியோர் முகாமில் தங்கி இருந்த மக்களிடம் என்ன தேவை உள்ளது, என்ன குறைபாடு இருக்கிறது என கேட்டறிந்தனர்.

பின்பு அங்கு வந்த புளியங்குடி RI-யிடம் பிரச்சினை குறித்து என்ன தீர்வு எடுக்கப்பட்டுள்ளது என கேட்டறிந்தனர். மேலும் இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்று அதிகாரியிடத்திலும் அந்த மக்களிடத்திலும் தெரிவித்தனர்.

இன்று போராட்டத்தின் விளைவாக அந்த மக்களுக்கு புளியங்குடி நகராட்சி சார்பாக பல்வேறு உதவிகளை செய்வதாக நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

Check Also

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *