Breaking News

மதுரை விமான நிலையத்தில் சிக்கி தவித்த பயணிகள் : களத்தில் தமுமுக

22.06.2020 மாலை 6.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமாவிலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு SpiceJet SG9790 தனியார் விமானம் (Charted Flight) வந்தடைந்தது. மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் வரும் விமானங்களை தவிர்த்து மற்ற விமானங்களுக்கு மக்களின் டெஸ்ட், தனிமைப்படுத்தல் உள்ளிட்டவைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காத நிலையில், செய்வதறியாமல் மக்கள் தவித்தனர். வேலைகளை இழந்து வரும் எங்களால் எப்படி தனியார் முகாம்களுக்கு பணம் செலுத்த முடியும் என்றும், தமிழகத்தில் தனிமைப்படுத்தும் பொறுப்புகளை அரசு ஏற்கும் என்ற தவறான செய்தியை சொல்லி எங்களை தமிழகம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தியும் விமான நிலையத்தில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு தகவல் கிடைக்க, விமானத்தில் வந்தடைந்த 188 நபர்கள் உட்பட, பேருந்து ஓட்டுனர்,நடத்துனர், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சுமார் 60 காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என 300 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

தமுமுக ஆலோசனையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி அவர்களுக்கு அரசு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். 68 நபர்களுக்கு நவாஸ்கனி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமான நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் K.முகம்மது கெளஸ் அவர்களின் தலைமையில், மமக வர்த்தகர் அணி மாநில செயலாளர் S.காதர் மைதீன், வில்லாபுரம் பகுதி கமால் மைதின் மற்றும் நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *