Breaking News

Daily Archives: June 23, 2020

பூவிருந்தவல்லி நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில் மக்கள் பதாகை எந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

23.06.20 திருவள்ளூர் மேற்கு  மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட கண்டோன்மென்ட் அம்மன்கோவில் தெரு, சின்ன மசூதி தெரு ஆகிய பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுவதை குறித்து பலமுறை பூவிருந்தவல்லி நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்ததனப் போக்கில் இருந்து வந்தது.இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நகராட்சியை கண்டித்து அமைதியாக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More »

மாலத்தீவிலிருந்து மதுரை வந்தடைந்த 170 பயணிகளுக்கு உணவு வழங்கி, உதவிகளை செய்தது தமுமுக

23.06.2020 காலை 10.30 மணியளவில் மாலத்தீவிலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 170 தமிழர்கள் வந்தடைந்தனர். இவர்கள் உணவின்றி பசியோடு இருப்பதாகவும்,இவர்களுக்கு உணவு வழங்குமாறும் அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை தொடர்புக் கொண்டு தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக தயாரித்து உணவு மற்றும் தண்ணீர் நேரடியாக பரிமாறப்பட்டது. மமக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காதர் மைதீன் தலைமையில் பெரியார் நகர் கிளையின் நிர்வாகிகள் ஹனீபா, ராஜா முகம்மது …

Read More »

புளியங்குடியில் தனியார் கல்லூரியில் தனிமை படுத்தப்பட்டுள்ள வெளியூர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சி

புளியங்குடியில்  வெளியூர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சி இதையடுத்து களத்திற்கு நேரடியாக சென்ற மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், தமுமுக முன்னால் நகர துணைச் செயலாளர் எஸ்.பி.மைதீன், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் மைதீன் ஆகியோர் முகாமில் தங்கி இருந்த மக்களிடம் என்ன தேவை உள்ளது, என்ன குறைபாடு இருக்கிறது என கேட்டறிந்தனர். …

Read More »

இளையான்குடியில் 2000 நபர்களுக்கு ஹோமியோபதி மருந்து வழங்கிய தமுமுக

23.06.20 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிக் ஆல்பம்30 என்ற மருந்து இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பொது மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.    

Read More »

கத்தார் நாட்டிலிருந்து கோவை வந்தடைந்த விமானம் : பயணிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனுப்பிய தமுமுக

23.06.2020 கத்தார் நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பயணிகளை கோவை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுத்தனர். கோவை வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் முகமது ரபி, சமூகநீதி மாணவர் …

Read More »

மாங்காடு பட்டூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை தமுமுக அடக்கம் செய்தது

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடல் காஞ்சிபுரம் மாங்காடு பட்டூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது.

Read More »

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் இறந்த சகோதரியின் உடலை அடக்கம் செய்த தமுமுக

23-06-2020 காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி கொரோனா நோய் தொற்றால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். செங்கல்பட்டு தெற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் யூனுஸ் அவர்கள் தலைமை மருத்துவரிடம் பேசி சகோதரியின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.காஞ்சிபுரம் தமுமுக மாவட்ட தலைவர் சலீம்கான்,செங்கல்பட்டு வடக்கு தமுமுக மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தாஜ்ஜூதீன்,மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரவூப், முன்னா மற்றும் …

Read More »

கென்யாவிலிருந்து வந்தடைந்த மக்களுக்கு உதவிய கோவை தமுமுக மமக

அரக்கோணத்திலிருந்து கென்யா நாட்டிற்கு ஆன்மிக சுற்றுப் பயணம் (தப்லீக்) சென்றவர்கள் கோவை வந்தடைந்தனர்.விமான நிலையத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக செய்யப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் ரபி, மமக மாவட்ட துணைச் செயலாளர் ஹக்கீம், இளைஞர் …

Read More »

ஈரோட்டில் மரணம் அடைந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக

23.06.2020 ஈரோடு மாநகரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். ஈரோடு மாவட்ட டவுன் காஜி மூலமாக தகவல் அறிந்ததும் ஈரோடு தமுமுக மாவட்ட செயலாளர் S.முஹம்மது லரிப்,மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் B.சலீம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட தொண்டரணி செயலாளர் சிக்கந்தர் பாஷா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை …

Read More »

தமிழ்நாடு வணிகர்சங்கம் அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய வணிகர் சங்கம் ஆதரவு

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்,என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர்சங்கம் அறிவித்துள்ள முழு கடையடைப்பு போரட்டத்தில் மனிதநேய வணிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தை …

Read More »