22.06.2020 கோவை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 12,500 தம்ளர்கள் வழங்கப்பட்டது. மேலும் கோவை KMCH மருத்துவமனையில் தங்கியுள்ள வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் கேரளா எர்ணாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மருத்துவ அணி மாநில துணை செயலாளர் முகமது ரபி, மமக மாவட்ட துணை செயலாளர் ஹக்கீம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது மைதீன் மற்றும் ரபியுதீன் ஹாஜியார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.