திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சாந்தி நகரில் வசித்தவர் சித்திக் பாபு(வயது 36). இவர் ஒர் மாற்று திறனாளி. முதுகலை படிப்பில் வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். 4 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் புறநோயாளிகளுக்கு வருகை சீட்டு பதியும் பணியில் சேர்ந்தார், பணியாளர் பற்றாகுறையால் உள்நோயாளிகள் இருப்பை பதிவு செய்யும் பணிக்கு மாற்றப்பட்டார், இங்கு தான் கொரோனா தொற்று உள்ளவர்களும் உள்நோயாளியாக பதியபட்டனர். தனக்கு கொரானோ தொற்று இருக்குமோ என எண்ணிய சித்திக் பாபு 11.6.20ல் சோதனைக்கு உட்பட்டு 12.6.20 கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் 19.06.20 மாலை அவர் உயிர் பிரிந்தது, மாதம் 8000 ஊதியம் பெற்று மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த இவரது மரணம் குடும்பத்தாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், மக்கள் பணியாற்றுபவர்கள் கொரனோ பாதிப்பால் மரணமடைய நேரிட்டால் அரசு நிவாரணம் வழங்கும் என்ற முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி சித்திக் பாபுவை இழந்து துயரில் உள்ள அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க கேட்டு கொள்கிறோம்.
நெல்லை தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால், சித்திக் பாபு உறவினர் சாகுல், தமுமுக மாவட்ட துணை செயலாளர் யாசிர், பகுதி தலைவர் காதர், செயலாளர் நாசர் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.