Breaking News

சுல்தான்பேட்டையில் தமுமுக ஏற்பாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து

22.06.2020 புதுச்சேரி மாநில அரசின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்வு வில்லியனூர், சுல்தான்பேட்டை முஹம்மதியா மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்வினை சுல்தான்பேட்டை முஹம்மதியா பள்ளிவாசல் மற்றும் புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் தமுமுக மமக புதுச்சேரி மாவட்ட தலைவர் NMS.சகாபுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் M.நூர் முகமது,தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.பஷீர் அகமது,
தமுமுக மமக வில்லியனூர் நகர தலைவர் A.அப்துல் காதர் உள்ளிட்ட தமுமுக மமக நிர்வாகிகளுடன், சுல்தான்பேட்டை முஹம்மதியா பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

Check Also

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *