Breaking News

Daily Archives: June 22, 2020

கடலங்குடியில் நடைப்பெற்ற தமுமுக கொடியேற்ற நிகழ்ச்சி

22.06.2020 மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் M.அப்துல் கஃபூர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கடலங்குடி கிளை IPP செயலாளர் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார். மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்கள் கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் ஜுபைர், மமக மாவட்ட செயலாளர் A.R.முபாரக் அலி, …

Read More »

500 இந்திய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய குவைத் தமுமுக

15ஆம் கட்டமாக குவைத் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொரோனா நிவாரணப் பொருட்கள் தமுமுக மண்டல செயலாளர் எருமப்பட்டி கமருதீன் அவர்களின் ஒருங்கிணைப்பில், சால்மியா பகுதியில் உள்ள இந்திய நாட்டை சேர்ந்த 500 நபர்களுக்கு தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஹஜ்ரத் S.K.சம்சுதீன் அவர்களின் தலைமையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமுமுக மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாகான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Read More »

12,500 டம்ளர்களை கோவை மருத்துவமனைக்கு வழங்கியது தமுமுக

22.06.2020 கோவை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 12,500 தம்ளர்கள் வழங்கப்பட்டது. மேலும் கோவை KMCH மருத்துவமனையில் தங்கியுள்ள வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் கேரளா எர்ணாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மருத்துவ அணி மாநில …

Read More »

பாளையங்கோட்டையில் உயிரிழந்த மருத்துவ ஊழியருக்கு அரசு நிவாரணம் வழங்க தமுமுக கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சாந்தி நகரில் வசித்தவர் சித்திக் பாபு(வயது 36). இவர் ஒர் மாற்று திறனாளி. முதுகலை படிப்பில் வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். 4 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் புறநோயாளிகளுக்கு வருகை சீட்டு பதியும் பணியில் சேர்ந்தார், பணியாளர் பற்றாகுறையால் உள்நோயாளிகள் இருப்பை பதிவு செய்யும் பணிக்கு மாற்றப்பட்டார், இங்கு தான் கொரோனா தொற்று …

Read More »

சுல்தான்பேட்டையில் தமுமுக ஏற்பாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து

22.06.2020 புதுச்சேரி மாநில அரசின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்வு வில்லியனூர், சுல்தான்பேட்டை முஹம்மதியா மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்வினை சுல்தான்பேட்டை முஹம்மதியா பள்ளிவாசல் மற்றும் புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் தமுமுக மமக புதுச்சேரி மாவட்ட தலைவர் NMS.சகாபுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் M.நூர் முகமது,தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.பஷீர் அகமது, தமுமுக …

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இரண்டு உடல்களை ஒரே நேரத்தில் அடக்கம் செய்த தமுமுக

சென்னை ஐஸ்ஹவுஸ் பாலாஜிநகரை சேர்ந்த பெண் கொரோனோ தொற்றால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.மைலாப்பூரை சேர்ந்த ஆண் ஒருவர் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றால் மரணமடைந்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இந்த இரண்டு உடல்களையும் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தின் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் இப்பணியை மேற்கொண்டனர்.

Read More »

திருச்சி விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றிய தமுமுக மமக

21.06.2020 சவுதி அரேபியா தமாம் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு, வாகன வசதி ஏற்பாடு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ரஹீம், தமுமுக மாவட்ட …

Read More »

கத்தார் நாட்டிலிருந்து மதுரை வந்தடைந்த 187 நபர்களுக்கு உதவிய தமுமுக

கத்தார் தோஹாவிலிருந்து 21.06.2020 இரவு 8:00 மணிக்கு மதுரை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 187 நபர்களுக்கும் காவல்துறையினர், பேருந்து ஓட்டுனர்கள், விமான நிலைய பணியாளர்கள் என மொத்தம் 300 நபர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக உணவு, தண்ணீர், ஸ்நாக்ஸ் போன்றவற்றை வழங்கப்பட்டு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சி வர்த்தகர் அணி மாநில செயலாளர் காதர் முகைதீன், தமுமுக …

Read More »