Breaking News

விமான நிலையங்களில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமுமுக : நவாஸ் கனி MP பாராட்டு

ஐக்கிய அரபு அமீரகம் ரஸல்கைமா பகுதியிலிருந்து அதிகாலை 4:00 மணிக்கு மதுரை சர்வதேச விமான வந்தடைந்த 145 பயணிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி MP அவர்கள் தமுமுக செய்து வரும் பணிகளை பாராட்டினார்.

காலையிலிருந்து உணவில்லாமல் இருந்த பயணிகளுக்கு உணவு வழங்கியதும் அவர்கள் மனதார நன்றியினை தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தகர் அணி செயலாளர் எம்.காதர் மைதீன் அவர்களின் தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் வில்லாபுரம் ஷேக் மரைக்காயர் மற்றும் எம்.எம்.சி காலனி ஆஷிக் ஹுசேன் மற்றும் மகபூப் பாளையம் ஷரிப் ஆகியோர் பணியாற்றினர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்த ஆரணி நகர தமுமுக மமகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் கொரோனா கொடிய நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை தமுமுக மமக ஆரணி நகர நிர்வாகிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *