Breaking News

தப்லீக் ஜமாத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் : ஐ.நா.மன்றத்தில் பதிவு செய்த மனிதநேய மக்கள் கட்சி

ஜூன் 16-2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஐ.நா.மன்றத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹமது கூறியதாவது:

#தமிழாக்கம்

முஸ்லிம்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா வருவது வாடிக்கையான ஒன்று. உலக அச்சுறுத்தலான கொரோனா தொற்றால், இத்தகையோர் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப இயலாமல் வெவ்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் மாத்திரம் ஃபிரான்ஸ்; பெல்ஜியம்; காமரூன்; காங்கோ; எத்தியோப்பியா; மலேசியா; இந்தோனேசியா; மியான்மர்; பங்களாதேஷ் மற்றும் பல நாடுகளிலிருந்த வந்திருந்த 12 பெண்கள் உள்ளிட்டோர் மீது, விசா சட்டங்களை மீறியதாகவும்; கொரோனாவைப் பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பெரும் முயற்சிக்களுக்குப் பின் பிணை வழங்கப்பட்டாலும், அனைவரும் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த வகையில், மனித உரிமை மீறலும்; வெளிநாட்டவர் மீதான வெறுப்பும்; எதிர்ப்பும் இந்தியாவில் தொடர்ந்து வந்தன. சுற்றுலா விசாவில் வந்து மத நடவடிக்கைகளிலும்; கொரோனாவைப் பரப்புவதிலும் ஈடுபட்டதாக கட்டமைக்கப்பட்டன.
இந்த அளவுகோல், முஸ்லிம்கள் விஷயத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், பிற சமயங்களான இந்து; கிருத்துவ; யூத சுற்றுலா பயணிகளிடம் நடைமுறைப்படுத்தப்படாததும் ஆச்சரியமான ஒன்றாகும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் இவ்வழக்கை முடிவிற்கு கொண்டு வர விரிவான விசாரணை நடத்தி, இந்திய அரசு கையொப்பமிட்டு அங்கீகரித்துள்ள ஐ.சி.சி.பி.ஆர் 12 ஆவது ஷரத்தின் படி, அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதி அளிக்க வேண்டுமென சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் என கூறினார்.

Check Also

தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *