Breaking News

ஐ.நா.மன்றத்தில் தொடர்ந்து ஒலித்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் குரல்!

ஜூன் 16-2020 நடைப்பெற்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹ்மது கலந்துக்கொண்டு  உரையாற்றினார்

தமிழாக்கம்

மாண்புமிகு உதவி அதிபர் அவர்களே

நான் இந்தியாவிலுள்ள மனித நேய மக்கள் கட்சியின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன்.

மனித உரிமைகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் அனைத்து உறுப்பு நாடுகளாலும் உருவாக்கப்பட்ட வியன்னா ஒப்பந்தத்தை உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர பெரும்பான்மையான பல நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதனை முழு மூச்சாக செயல்படுத்த வேண்டிய,ஜனநாயத்தின் முழு உதாரணமாகத் திகழும் இந்தியா, இன்று குடிமக்கள் சந்திக்கும், இன வேறுபாடுகள்; அச்சுறுத்தல்கள்; வன்முறை வெறியாட்டங்களை ஊக்குவிப்பது குறித்து அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டுமெனெ நாங்கள் விரும்புகிறோம்.

முஸ்லிம்; கிருத்துவ; தலித் மற்றும் குறிப்பிட்ட சில இந்து சமூக செயற்பாட்டாளர்களும்; மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள்.

சந்திர சேகர ஆஸாத், முதுகலை மாணவி ஸஃபூரா சர்க்கார் உள்ளிட்ட பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றனர். அரசு அவர்கள் மீது கருப்பு சட்டங்களான என்.ஐ.ஏ ; யூ.ஏ.பி.ஏ பொன்றவைகளை சுமத்தி அவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கின்றது. இந்தியாவில் கொரோனா தொற்றைப் போலவே, மதவெறி தொற்றும் அதிகமாக உள்ளது.முஸ்லிம்கள் மீது, அவர்கள் தான கோவிட் 19 வைரஸைப் பரப்பினார்கள் எனும் வெறுப்பு பிரச்சாரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட்டதைப்போல, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும்; தலித்களும்; கிருத்துவர்களும் மதவெறியின் பெயரால் பிரித்தாளப்பட்டு இந்தியாவில் கொல்லப்படுகின்றனர். கறுப்பு உயிரும் முக்கியமானது என்பதைப்போல், முஸ்லிம்கள் மற்றும் தலித்களின் உயிரும் முக்கியமானது.

ஸஃபூரா சர்க்கார் கர்ப்பிணியாக உள்ள நிலையிலும், பிணை மறுக்கப்பட்ட்டு கொரோனா தொற்று அபாயத்தில் சிறையில் உள்ளார். இது இந்தியா ஒப்புக்கொண்ட வியன்னா ஒப்பந்தத்தின் மீது மிகப்பெரும் கேள்வியை எழுப்புகின்றது.

Check Also

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *