Breaking News

மருத்துவமனையிலிருந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்த தம்பதியருக்கு உதவிய தமுமுக-வின் மனிதநேய பணி

திருப்பத்தூரில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் பிரசவத்திற்காக சென்னை வந்த தம்பதிகள் குழந்தை பெற்று மூன்று மாதமாக சொந்த ஊருக்கு போகமுடியாமல் மருத்துவமனையின் வளாகத்திலேயே தங்கி இருந்தனர். மருத்துவமனையின் காப்பகத்தில் அடைக்கலம் புகுந்த அவர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியது. செய்வதறியாமல் தவித்த தம்பதிகள் மூன்று குழந்தைகளுடன் இருப்பதை கவனித்த மருத்துவமனை உள் காவல்துறை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஊர்தி ஓட்டுநர் காதர் அவர்களின் தொலைபேசி நம்பரை கொடுத்து உதவி கோர சொல்லி உள்ளனர்.

நேற்று இரவு 15.06.2020 தொலை பேசியில் தமுமுக-வினரை தொடர்பு கொண்டவுடன் நேரில் சென்று பார்வையிட்ட போது
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பீடி சுற்றி பிழைப்பு நடத்த கூடியவர்கள் என்பதை அறிந்தவுடன் உடனடியாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி அவசர ஊர்தியில் கட்டணமில்லாமல் அந்த தம்பதிகளை திருப்பத்தூரில் உள்ள அவர்களின் வீட்டில் கொண்டு விட்டு வந்தார்கள்.

வேலையின்றி தவித்த அந்த நபரை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்.

Check Also

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *