Breaking News

பரிதவித்த சகோதரருக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக

பஹ்ரைன் நாட்டிலிருந்து ஒரு காலும் கையும் செயலிழந்து, உடல் நிலை மோசமான நிலையில் முகமது ஜின்னா என்ற சகோதரர் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் பல்வேறு கட்ட முயற்ச்சிகளை மேற்க்கொண்டு, பல அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார்.

பல்வேறு முயற்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அவசர ஊர்தியின் மூலம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தமுமுக மனிதநேய மக்கள் மட்சி மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் தாம்பரம் இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரகுமான், தொண்டரணி செயலாளர் ஜமால், தாம்பரம் சமூகநீதி மாணவர் இயக்கம் SMI ஜீலானி ஆகியோர் அவரை வழியனுப்பி வைத்தனர்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *