தாய்லாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்தடைந்து சென்னையில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 நபர்கள் மயிலாடுதுறை எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் P.S.M.புஹாரி மற்றும் தமுமுக சகோதரர்கள் உடனே சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அதிகாரிகளிடம் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். பிறகு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை (negative) என்று வந்த பிறகு அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.