Breaking News

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி எனத் தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த 10ஆம் வகுப்பு மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உட்பட திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் தமிழக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி நாளை (10.6.2020) அனைத்து கட்சிகள் சார்பில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யக் கோரி இல்லங்களின் முன்பு கண்டன முழக்கங்களைப் பதிவு செய்யும் போராட்டம் அறிவித்த நிலையிலும், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இச்சூழலில் நாளை நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகின்றது.

காலந்தாழ்த்திய அறிவிப்பு என்றாலும் சுமார் 9 லட்சம் மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். பிளஸ் 1 வகுப்பிற்கு எஞ்சியிருந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களின் நிலை என்ன என்பதையும் தமிழக அரசு விளக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

 

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *