Breaking News

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில்
151 தமிழர்களை
வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…

இன்று (ஜூன் 6) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் திருமிகு ஹம்னா மரியம் மற்றும் திருமிகு அம்ஜத் அவர்கள் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சகோ. சிராஜூதீன், சகோ. ரமணா மற்றும் ஜித்தா தமுமுக நிர்வாகிகள் கீழை இர்பான், செல்வக்கனி, அப்துல் மஜீத் ஆகியோர் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஏறும் வரை உதவிகள் செய்தனர்.

உடல்நிலை குறைவான பயணிகளுக்கு உதவிட சென்னை விமான நிலையத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாகான் தலைமையில் மமக பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப்,மமக பொதுச்செயலாளர் மதுரை கவுஸ்,தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன்,தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் அலி ஆகியோர் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு உதவ தமுமுக தொண்டர்கள் அனைத்து விமான நிலையங்களிலும் களப்பணியில் உள்ளதும் குறிப்பிடதக்கது.

Repatriation flight under #VandeBharatMission from Jeddah to Chennai, AI-1942 departed today at 1505 hrs carrying 151…

Posted by India in Saudi Arabia (Consulate General of India, Jeddah) on Saturday, 6 June 2020

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *