வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள தமுமுக-மமக மீட்புக் குழு எண்கள் சென்னை – திருச்சி – மதுரை என பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து விமான நிலையங்களில் தமுமுக-மமக மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
கத்தாரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களுக்கு தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு தமுமுக சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு வாகனம் ஏற்பாடு செய்து தமுமுக-வினர் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்தனர்.
மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
குவைத்திலிருந்து திருச்சி சர்வசேத விமான நிலையத்திற்கு வருகை தந்த சென்னை நீலாங்கரை பகுதியைச் சார்ந்த குலாம் ஜஹான் என்ற பெண்மணியிடம் எந்த பொருளாதாரமும் இல்லை என்றும், அவர்கள் பரிசோதனை முடியும் வரை திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்க சொல்லியுள்ளதாகவும், விடுதிக்கு அந்த பெண்மணிதான் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் கூறினார்.தமுமுக நிர்வாகிகள் அரசு தரப்பு நிர்வாகிகளிடம் பேசி எந்த செலவும் இல்லாமல் அந்த பெண்னை அதே விடுதியில் தங்கள் வைத்துள்ளனர்.ட