Breaking News

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் மின்சார வாரியம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கொரோனா தொற்று பரவலால் கடந்த சில மாதங்களாக மின்கட்டண கணக்கீடு எடுக்காததால் மின்நுகார்வோர்கள் மொத்தமாகச் சேர்த்து அதிகளவு கட்டணத்தைக் கட்ட வேண்டிய நிலையை மின்சார வாரியம் உருவாக்கியுள்ளது.

உதாரணமாக ஒரு வீட்டின் பயன்படுத்தப்பட்ட மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் எனக் குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 எனக் கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது.

இதேபோன்று 1000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதனை 500 யூனிட்டுகளாக இரண்டுமுறை பதிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக, 1000 யூனிட்டுகளுக்கான கட்டணத்தை மொத்தமாகக் கணக்கிட்டு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 கட்டணம் வசூலிக்கின்றார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இதுபோன்ற நடவடிக்கையால் மின் நுகர்வோர்கள் முன்பைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பொது மக்களிடம் கட்டண கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையீட்டு கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மக்களின் மீது கூடுதல் சுமையைச் சுமத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த கொரோனா ஊரடங்கில் சீர்குலைந்துள்ள பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு மாத மாதம் மின் பயன்பாட்டின் அளவீடை கணக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

பி.சி. எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் சமையலர் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுலவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *