குவைத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் என்பவர் கடந்த 16/05/2020 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அவர் வேலை செய்த கம்பெனி நிர்வாகமும், குடும்பத்தினரும் குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் கேட்டுக்கொண்டனர்.
மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களின் ஆலோசனையின்படி, மண்டல துணை தலைவர் கட்டிமேடு வசீம்,இஸ்லாமிய பிரச்சார பேரவை(IPP) துணை செயலாளர் ஏர்வாடி பீர்முஹம்மது,அரந்தாங்கி யூனுஸ் ஆகியோர்களின் துரித முயற்ச்சியால் இறந்தவரின் உடல் கர்நாடகாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அக்குடும்பத்தினர் தமுமுக-விற்கு நன்றி தெரிவித்தனர்.