Breaking News

பாஜக மாநில பொதுச் செயலாளர் காரை மீட்டு கொடுத்த தமுமுக

காணாமல் போன பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் காரை மீட்டு கொடுத்த தமுமுக

01.06.2020 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது.திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஊத்தங்கரை நகர தலைவர் ரசூல் பாஷா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிற்கு அளித்த தகவலின் பேரில் தேடுதலில் ஈடுபட்டனர்.

திருடப்பட்ட காரை பிடிக்க முயன்ற தமுமுக மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மீது மோதும் விதமாக சிங்காரபேட்டை வழியாக வேகமாக சென்றதையடுத்து சிங்காரபேட்டை தமுமுக-வினருக்கு தகவலளிக்கப்பட்டு
பாம்பாறு அணை அருகில் காரை மடக்கி பிடித்தனர்.இரண்டு பேர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

துரிதமாக செயல்பட்ட தமுமுக சகோதரர்களுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Check Also

நாகூரில் தொடர்ச்சியாக தமுமுக-வில் இணைந்து வரும் மாற்று கட்சியினர்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *